2 வயது மகனை காப்பாற்ற உ யிரை பணயம் வைத்து போ ராடிய தாய்!!

456

குருணாகலில் 2 வயதான மகனை காப்பாற்ற உ யிரை பணயம் வைத்து போ ராடிய தாய் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

பொல்பித்திகம பிரதேசத்தில் ஆழமான கிணற்றுக்குள் விழுந்து உ யிருக்கு போ ராடிய தனது மகனை காப்பாற்ற, தாயொருவர் கிணற்றில் குதித்துள்ளார்.

இரேஷா தமயந்தி என்ற பெண்ணே இந்த வீர செயலை செய்துள்ளதாக பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கடும் வரட்சி காரணமாக கிணற்றின் நீர் வற்றிப் போயுள்ளது. இதனால் சற்று தூரத்தில் நீர் உள்ள ஆழமான கிணற்றில் தாய் தனது இரண்டு மகன்களுடன் குளிக்க சென்ற போதே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

முதலில் மகன்கள் இருவரும் குளித்த பின்னர் தாய் குளிக்க சென்றார். திடீரென மூத்த மகனின் கூச்சல் சத்தம் கேட்டு சென்ற போது, சிறிய மகன் கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கியுள்ளார்.

உடனடியாக தாய் கிணற்றில் குதித்து மகனை காப்பாற்றியுள்ளார். வேகமாக கிணற்றில் குதித்தமையினால் தாயின் கால்கள் உடைந்து நடக்க முடியாமல் படுக்கையில் முடங்கியுள்ளார்.

இந்த செய்தியை கேட்டு அங்கு சென்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாபஹுவ தொகுதி அமைப்பாளர் தாயின் செயலுக்கு பாராட்டு தெரிவித்ததுடன், தேவையான உதவிகளை பெற்று தருவதாக வாக்குறுதியளித்துள்ளார்.