வவுனியாவில் சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி!!

3


வி ழிப்புணர்வு பே ரணி


வவுனியாவில் சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் “பிள்ளைகளின் வெற்றிக்கான நட்பான நாடு” எனும் தொனிப்பொருளில் இன்று (01.10.2019) விழிப்புணர்வு துவிச்சக்கரவண்டி பேரணி ஒன்று இடம்பெற்றது.வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திற்கு முன்பாக பாடசாலை மாணவர்களின் துவிச்சரக்கரவண்டி பேரணியினை வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார்.


வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமான பாடசாலை மாணவர்களின் துவிச்சரக்கரவண்டி பேரணியானது ஏ9 வீதியுடாக சென்று மணிக்கூட்டு கோபுரம் வழியாக திரும்பி கந்தசுவாமி கோவில் வீதியூடாக வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம் சென்று அங்கிருந்து மாணவர்களை அழைத்துக்கொண்டு,


ஹொரவப்பொத்தானை வீதியூடாக வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலைக்கு அங்கிருந்து பாடசாலை மாணவர்களை அழைத்துக்கொண்டு மீண்டும் ஏ9 வீதிக்கு சென்று மன்னார் வீதியூடாக வவுனியா காமினி மகா வித்தியாலயத்திற்கு சென்று மாணவர்களை அழைத்துக்கொண்டு மீண்டும் மன்னார் வீதியூடாக பயணித்து வவுனியா பட்டானீச்சூர் முஸ்ஸிம் மகா வித்தியாலயத்திற்கு சென்று அங்கிருந்து மாணவர்களை அழைத்துக்கொண்டு,

மன்னார் வீதியூடாக பயணித்து பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரிக்கு சென்று அங்கிருந்து மாணவர்களை அழைத்துக்கொண்டு வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரிக்கு அங்கிருந்து சென்று மாணவர்களை அழைத்துக்கொண்டு ஏ9 வீதியூடாக மாணவர்களின் துவிச்சரக்கரவண்டி பேரணியானது வவுனியா மாவட்ட செயலகத்தினை வந்தடைந்தது.

வவுனியா மாவட்ட செயலக வளாகத்தில் அரசாங்க அதிபர் ஜ.எம்.ஹனிபா அவர்களின் சிறுவர் தின ஆசியுரை இடம்பெற்றதுடன் பாடசாலை மாணவர்களுக்கான சிறுவர் திறன் விருத்தி செயலமர்வும் இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட செயலக சிறுவர் மேன்பாட்டு உத்தியோகத்தர் ஜெ.ஜெயகெனடி தலைமையில் இடம்பெற்ற துவிச்சக்கரவண்டி பேரணியில் வவுனியா மாவட்ட உதவி அரசாங்க அதிபர் நா.கமலதாசன், ஓமேகா நிறுவனத்தின் அதிகாரிகள் , வர்த்தக சங்க உறுப்பினர்கள், அரச மற்றும் அரசார்பற்ற உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.