வாள்வெட்டு தா க்குதலுக்கு இலக்கானவர் 3 வாரங்களின் பின் உ யிரிழப்பு!!

436

கோண்டாவில் உப்புமடச் சந்தியில்

வாள்வெட்டுக் கும்பலின் தா க்குதலுக்கு இலக்கான இரும்பக உரிமையாளர் 3 வாரங்களின் பின் சிகிச்சை பயனின்றி நேற்றிரவு உ யிரிழந்துள்ளார்.

எனினும் சம்பவம் இடம்பெற்று 3 வாரங்களுக்கு மேலாகியும் கோப்பாய் பொலிஸார் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என உ யிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கோண்டாவில் உப்புமடச் சந்தியில் அமைந்துள்ள லக்சுமி இரும்பகத்தின் உரிமையாளர் கந்தையா கேதீஸ்வரன் (வயது 47) என்பவரே உ யிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் கடந்த செம்டெம்பர் மாதம் ஆறாம் திகதி மாலை 4 மணியளவில் இடம்பெற்றது. இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலே இரும்பகத்துக்குள் புகுந்து அதன் உரிமையாளரை கண்மூடித்தனமாகத் தா க்கி விட்டு தப்பிச் சென்றுள்ளது.

இதனால் தலையில் படுகாயமடைந்த இரும்பக உரிமையாளர், நேற்று வரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். இது தொடர்பில் உ யிரிழந்தவரின் உறவினர்கள் கூறுகையில், சம்பவ தினத்தன்று கோப்பாய் பொலிஸார் இரும்பகத்துக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

எனினும் உரிமையாளரைத் தா க்க கும்பல் பயன்படுத்திய மரக்கட்டையை சான்றுப்பொருளாக எடுத்துச் செல்ல பொலிஸார் மறுப்பு தெரிவித்திருந்தனர். எனினும் உரிமையாளர் உ யிரிழந்தவுடன் உறவினர்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்கு கோப்பாய் பொலிஸார் முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.