மலை உச்சியில் இருந்து கவிழ்ந்த பயணிகள் பேருந்து : 23 பேர் ப ரிதாபமாக ப லி : உடல்களை மீட்பதில் சிக்கல்!!

292

பயணிகள் பேருந்து

பெரு நாட்டில் மலை உச்சியில் இருந்து பயணிகள் பேருந்த க விழ்ந்து விபத்துக்குள்ளானதில் ப லி எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Quispicanchi மாகாணத்தில் இவ்விபத்து நிகழ்ந்தள்ளது. அமேசான் மழைக்காடு நகரமான Puerto Maldonado-ல் இருந்து highland நகரமான Cusco-க்கு சென்று கொண்டிருந்த பேருந்து, செவ்வாய்க்கிழமை விடியற்காலையில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

பேருந்து சுமார் 48 பயணிகளுடன் பயணித்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த விபத்தில் 17 பேர் கொ ல்லப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், தற்போது 23 ஆக அதிகரித்துள்ளது.

பேருந்து ஓட்டுநர் ஏன் வாகனத்தை சாலையிலிருந்து இறக்கி 100 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் ஓட்டினார் என்பதை கண்டுபிடிக்க பொலிசார் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.அதேசமயம், விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பா திக்கப்பட்டவர்கள் வி ழுந்து நொ றுங்கிய பேருந்திற்குள் சிக்கி இருப்பதாகவும், பேருந்து கவிழ்ந்த மிகவும் மோசமான பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் அவர்களை வெளியே எடுப்பது கடினம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெருவில் வேகம், மோசமான சாலை, அதிகாரிகளின் குறைந்தபட்ச மேற்பார்வை காரணமாக கொடிய சாலை விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கின்றன. ஜூலை மாதம், கனேட் மாகாணத்தில் மலைப்பாதையில் பேருந்து மோ தியதில் 19 பேர் கொ ல்லப்பட்டனர், மேலும் 8 பேர் கா யமடைந்தனர்.

2018 ஆம் ஆண்டில், பெருவில் சாலை விபத்துக்களில் கிட்டத்தட்ட 3,250 பேர் இ றந்தனர், 2017ல் கிட்டத்தட்ட 2,830 ஆக இருந்தது என்று அரசாங்க புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.