ஒரே இரவில் லட்சாதிபதியான ஏழை ரிக்‌ஷா ஓட்டுனர் : எப்படி சாத்தியமானது?

316

இந்தியாவில் ஏழை ரிக்‌ஷா ஓட்டுனருக்கு லொட்டரில் விழுந்த பம்பர் பரிசின் மூலம் ஒரே இரவில் அவர் லட்சாதிபதியாகியுள்ளார்.

மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் கவுர் தாஸ். ரிக்‌ஷா ஓட்டும் தொழில் செய்து வருகிறார். கவுர் தாஸ் தனது தாய், மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

அவர் ரிக்‌ஷா ஓட்டி சம்பாதிக்கும் வருமானம் குடும்பத்துக்கு போதுமானதாக இல்லாததால் அவரின் தாயும், மனைவியும் கூலி வேலை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் வெளியிலிருந்து தாஸ் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது லொட்டரி சீட்டு விற்கும் நிலையம் வந்தது.

அதை நடத்தும் நபர் தாஸிடம் லொட்டரி சீட்டு வாங்கிகொள்ளும்படி கூறினார்.

ஆனால் தன்னிடம் வெறும் 70 ரூபாய் மட்டுமே இருப்பதாக தாஸ் கூறியும் அவர் விடவில்லை, இதையடுத்து ரூ 30 கொடுத்து லொட்டரி சீட்டு வாங்கினார் தாஸ்.

இந்நிலையில் தான் வாங்கிய லொட்டரி சீட்டுக்கு பரிசு ஏதேனும் விழுந்ததா என பார்க்க கடைக்கு சென்ற தாஸுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

அதாவது முதல் பரிசான ரூ 50 லட்சம் அவருக்கு லொட்டரியில் விழுந்ததை உறுதி செய்து கொண்டு மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்ற தாஸ் உடனடியாக வீட்டுக்கு சென்று மனைவியிடம் அதை கூறினார்.

இதையடுத்து நேற்று வங்கியில் சென்று லொட்டரி சீட்டை ஒப்படைத்தார் தாஸ்.

அவர் கூறுகையில், லொட்டரியில் கிடைத்த பணத்தை வைத்து புதிய வீடு கட்டுவேன், தற்போது இருக்கும் சிறிய வீட்டில் எங்கள் ஆறு பேரால் வசிக்க முடியவில்லை.

இதோடு என் குழந்தைகளுக்கு தரமான கல்வியை கொடுக்கவும் திட்டமிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.