கிழக்கில் திருகோணமலை தொடக்கம் மட்டக்களப்பு வரை காற்றழுத்தம் : கடல் கொந்தளிப்பு!!(படங்கள்)

553

கிழக்கு மாகாணத்தில், திருகோணமலை தொடக்கம் மட்டக்களப்பு வரையான காற்றழுத்தம் மற்றும் கடல் கொந்தளப்பு காரணமாக திருகோணமலை மீனவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை கடற்றொழிலில் ஈடுபடவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இடர் முகாமைத்துவ நிலைய அறிவித்தல்களின் படி எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் காரணமாகவே இம் மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபடவில்லை என தெரிவித்தனர்.

இந்நிலையில் திருகோணமலையில் நேற்று அதிகாலையிலிருந்து கடும்காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.

திருகோணமலை கடல் கொந்தளிப்பதன் காரணமாக கடற்கரை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவ படகுகளை உயர்வான இடங்களிற்கு மீனவர்கள் நகர்த்தியுள்ளனர்.

1713 11 12 16 15