வவுனியா வடக்கில் முதன்முறையாக நீரேந்து பிரதேசங்களில் மருதமர நடுகை ஆரம்பம்![?]

592

வனபாதுகாப்பு மற்றும் சுற்றாடல் அமைச்சினால் ஐப்பசி மாதம் அளவில் மேற்கொள்ளப்படுகின்ற ”வன ரோபா”  நிகழ்வானது  வவுனியா மாவட்ட நெடுங்கேணி  வட்டார வனஅலுவலகத்தினால் இந்த வருடம்  முதன்முறையாக நெடுங்கேணி பிரதேசத்தில் அமைந்துள்ள கமநல சேவைகள் திணைக்களத்திற்குட்பட்ட மருதங்குளத்தில் நீரேந்து பிரதேசத்தில் 04.10 2019 அன்று மரநடுகை நிகழ்வானது சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது  மருத மரக்கன்றுகள் நாட்டிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில்  நெடுங்கேணி உதவி பிரதேச செயலாளர்,வவுனியா மாவட்ட கமநல சேவைகள் பிரதி பணிப்பாளர், நெடுங்கேணி வட்டார வன அதிகாரி,வவுனியா வடக்கு பிரதேச சபையின்  தவிசாளர், வவுனியா வடக்கு பிரதேச சபையின்  செயலாளர், நெடுங்கேணி கிராமசேவையாளர்,   கமநல சேவைகள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள்  கலந்து கொண்டனர் .

இலங்கை ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய வன மூடுகையினை அதிகரிக்கும் நோக்கில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .