நள்ளிரவில் கனடா குடியுரிமை பெற்ற இளம்பெண் செய்த மோசமான செயல்!!

271

கனடா குடியுரிமை பெற்று அங்கு வாழ்ந்து வரும் இளம் பெண்ணொருவர் மும்பையில் தேர்தல் பறக்கும் படையினரை கீழே தள்ளிவிட்டதோடு அவர்களின் கமெராவை உடைத்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மராட்டியத்தில் வருகிற 21ம் திகதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பணம் வினியோகம் செய்வதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் மும்பையில் இரு தினங்களுக்கு முன்னர் நள்ளிரவு 12.30 மணிக்கு தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் அதை வீடியோவாக பதிவு செய்தனர். அப்போது அங்கு வந்த காரை பொலிசார் நிறுத்திய போது ஷீனா லகானி என்ற இளம் பெண் உள்ளிருந்தார்.

அவர் தான் கனடா பிரஜை எனவும் மொடலாக இருப்பதாகவும் கூறியதோடு தன்னை வீடியோ எடுக்க வேண்டாம் என கூறினார், மேலும் தான் கனடாவை சேர்ந்தவள் என்பதால் இந்த தேர்தலுக்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை என்றும் தெரிவித்தார்.

பின்னர் அவரை சோதனை செய்த பொலிசார் திருப்பி அனுப்பிவிட்டனர். ஆனால் மீண்டும் அடுத்த 1 மணி நேரத்தில் பைக்கில் தனது நண்பர்களுடன் அங்கு வந்த ஷீனா தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு தன்னை வீடியோ எடுத்த காட்சிகளை அழிக்குமாறு கூறி அதிகாரியை கீழே தள்ளிவிட்டதோடு கமெராவையும் உடைத்தார்.

பின்னர் சம்பவ இடத்துக்கு பொலிசார் வந்து ஷீனாவை கைது செய்தனர். இது குறித்து பொலிசார் கூறுகையில், ஷீனாவிடம் விசாரித்து வருகிறோம், சம்பவத்தின் போது ஷீனா ம து அருந்தவில்லை என மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

எனினும் அவர் போ தைப்பொருள் பயன்படுத்தி இருக்கலாம் என சந்தேகிக்கிறோம் என கூறியுள்ளனர்.