வவுனியாவில் தண்ணீர் வேண்டும் என கோரி வீதியில் இறங்கிய பொதுமக்கள்!!

338

வீதியில் இறங்கிய பொதுமக்கள்

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட மதவுவைத்தகுளம் பகுதி மக்கள் குடிநீர் கோரி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணியளவில் போ ராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினால் வழங்கப்படும் குடிநீர் திட்டம் கடந்த நான்கு நாட்களாக சீரான முறையில் வழங்கப்படாமையினால் தாம் பல்வேறு சிரமக்களுக்கு முகங்கொடுப்பதாக தெரிவித்து மதவுவைத்தகுளம் பகுதி மக்கள் அப்பகுதியில் அமைந்துள்ள குடிநீர் தாங்கிக்கு முன்பாக போ ராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த பல மாதங்களான குடிநீர் சிரானமுறையில் வழங்கப்பட்ட போதிலும் கடந்த வாரம் குடிநீர் வழங்கும் திட்டம் வேறு நபருக்கு மாற்றப்பட்டது.

இதன் பின்னரே குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாகவும் இவ்விடயம் தொடர்பில் பல தடவைகள் உரிய அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையெனவும் போ ராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்தனர்.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கம் அவர்களை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு வினவிய போது,

இக் குடிநீர் திட்டம் தனியார் நிறுவனம் ஒன்றினால் அமைக்கப்பட்டு பின்னர் பிரதேச சபையிடம் ஒப்படைக்கப்பட்டது. குடிநீர் திட்டத்தின் மூலம் வருமானத்தினை பெற்று அதனை பராமரிக்குமாறு அக்கிராமத்திலுள்ள பொது அமைப்பினரிடம் பிரதேச சபையினர் ஒப்படைத்தனர்.

குடிநீர் வழங்கப்படாமை தொடர்பில் குறித்த அமைப்பினரே இதற்கு பொறுப்பு வாய்ந்தவர்கள். அத்துடன் இவ்விடயம் தொடர்பில் எமக்கு இதுவரை எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கப்பெறவில்லை.

முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால் அதனை பிரதேசசபையினர் கண்காணிப்பு மேற்கொள்ள முடியுமென தெரிவித்தார்.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் தன்னிச்சையாக செயற்படுவதாக தெரிவித்து வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக கடந்த (03.10.2019) அன்று மதவுவைத்தகுளம் சனசமூக நிலையத்தின் உபதலைவர் மாணிக்கம் சிவச்சந்திரன் போ ராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.