வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற சிறுவர் தினம்!!

3


சிறுவர் தினம்


போலியற்ற அழகிய சிறுவர் சந்ததியினரே உலகை பிரகாசிக்கச் செய்யும் அடையாளங்களாகும். அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பெரியவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இலங்கையில் பல்வேறு பகுதிகளில் சிறுவர் தினம் அனுஸ்டிக்கப்பட்டது.அவ்வகையில் வவுனியா சிறுவர் அபிவிருத்தி கரங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு இன்று வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.


நகரசபை உறுப்பினர் க.செந்தில்ரூபன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக ப.சத்தியலிங்கம் கலந்து கொண்டிருந்ததுடன் சிறப்பு விருந்தினராக நகரசபை உறுப்பினர்களான க.சந்திரகுலசிங்கம், சு.காண்டீபன், ந.சோனாதிராஜா, நா.லக்சனா, ரி.கே.இராஜலிங்கம், த.பரதலிங்கம் மற்றும் மதத்தலைவர்கள், பெற்றோர்கள், சிறுவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


இதன் போது சிறுவர்களுக்கு கௌரவிப்பு இடம்பெற்றதுடன் சிறுவர்களின் பாடல் , நடனம் போன்ற பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.