டெஸ்ட் தொடரிலிருந்து இலங்கை வீரர் குலசேகர விலகல்!!

511

Kulasekaraபாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இலங்கை அணியின் குலசேகரா விலகியுள்ளார்.

இலங்கை- பாகிஸ்தான் அணிகள் மோதும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது.

இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

இந்நிலையில் காயம் அடைந்த இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் குலசேகர தொடரிலிருந்து விலகியுள்ளார். இது இலங்கை பெரிய பின்னடைவாக இருக்கும் என கருதப்படுகிறது.