திருமணத்திற்கு சென்றபோது நடந்த கோர விபத்து : பரிதாபமாக ப லியான இளம்தம்பதி!!

3


இளம்தம்பதி


சென்னையில் திருமணத்திற்கு சென்றுகொண்டிருந்த போது நடந்த கோர விபத்தில் இளம்தம்பதி பரிதாபமாக உ யிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த தமிழ்மாறன் (21) – சுவேதா (20) தம்பதி தங்களுடைய இரண்டு குழந்தைகள் மற்றும் நண்பர்கள் என மொத்தம் 7 பேருடன், திருமணம் ஒன்றிற்கு காரில் புறப்பட்டு சென்றுள்ளனர்.கிழக்கு கடற்கரை சாலையில் வேகமாக சென்றுகொண்டிருந்த கார், திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த ஜெனரேட்டர் மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.


இந்த விபத்தில் தமிழ்மாறன் மற்றும் அவருடைய மனைவி சுவேதா சம்பவ இடத்திலேயே ப லியாகினர். சம்பவம் அறிந்து வந்த பொலிஸார், படுகாயங்களுடன் கிடந்த 5 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.