கொழும்பு சொகுசு ஹோட்டல் நீர் தடாகத்தில் இருந்து மலேசிய பிரஜை சடலமாக மீட்பு!!

438

Swimingகொம்பனித்தெரு பொலிஸ் பிரிவில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றின் நீர் தடாகத்தில் இருந்து மலேசிய பிரஜை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 29 வயதுடைய மலேசிய பிரஜையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு 10 மணி அளவில் நீர் தடாகத்தில் ஒருவர் மிதப்பதை கண்ட சுத்திகரிப்பு ஊழியர்கள் உடனே ஹோட்டல் நிர்வாகத்திற்கு அறிவித்து அந்த நபரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற அவர் உயிரிழந்திருப்பதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. கொம்பனித்தெரு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.