வவுனியாவில் அதிகரிக்கும் மழை, இடிமின்னல் தாக்கம் : அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!

378

இடிமின்னல் தாக்கம்

வவுனியாவில் கடந்த ஆறு நாட்களாக 128.6மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது கடந்த நான்கு நாட்களாக மாலை வேளையில் இடிமின்னலுடன் மழை பெய்து வருகின்றது.

மாலை வேளைகளில் மழை மேலும் பெய்யக்கூடும், இடி மின்னல் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. எனவே பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு வவுனியா வளிமண்டலவியல் அவதானிப்பாளர் தா.சதானந்தன் தெரிவித்துள்ளார்.

கடந்த நான்காம் திகதி காலை 8.30 மணியிலிருந்து ஐந்தாம் திகதி காலை 8.30 மணிவரையும் 7.5 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதுடன் ஆறாம் திகதி காலை 8.30 மணியிலிருந்து ஏழாம் திகதி காலை 8.30 மணிவரையும் 45.4 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதுடன் ஏழாம் திகதி காலை 8.30 மணியிலிருந்து எட்டாம் திகதி காலை 8.30 மணிவரையும் 3.5 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதுடன்,

எட்டாம் திகதி காலை 8.30 மணியிலிருந்து ஒன்பதாம் திகதி காலை 8.30 மணிவரையும் 26.6 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளது. ஒன்பதாம் திகதி காலை 8.30 மணியிலிருந்து பத்தாம் திகதி காலை 8.30 மணிவரையும் 45.6மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளது. இதனடிப்படையில் கடந்த ஆறு நாட்களாக 128.6 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி வவுனியாவில் பதிவாகியுள்ளது.

மழையுடனான காலநிலை நீடிப்பதுடன் மாலை வேளைகளில் பெய்துவரும் மழையுடன் இடி மின்னல் தாக்கம் அதிகமாக காணப்படும். எனவே பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் நடந்துகொள்ளுமாறு வவுனியா வளிமண்டலவியல் அவதானிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.