வவுனியா நகர் பகுதியில் டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த களத்தில் குதித்த வவுனியா வர்த்தக சங்கம்!!

541

டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த..

வவுனியா நகர் பகுதியில் பெருக்கெடுத்துள்ள டெங்கு நுளம்புகளை இல்லாது ஒழிக்கும் செயற்றிடத்தினை வவுனியா சுகாதார சேவைகள் பணிமணையினருடன் இணைந்து வவுனியா வர்த்தக சங்கத்தினர் முன்னெடுத்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பான விழிப்பணர்வு கருத்தரங்கு மற்றும் இச் செயற்றிட்டத்தில் வர்த்தகர்களை உள்வாங்குதல் தொடர்பான கலந்துரையாடல் வவுனியா சுகாதார சேவைகள் பணிமணை கேட்போர் கூடத்தில் நேற்று (09.10.2019) மாலை இடம்பெற்றது.

பொது சுகாதார பரிசோதகர்களின் ஆளணி பற்றக்குறையினை கவனத்தில் கொண்டு வவுனியா சுகாதார சேவைகள் பணிமணையினர் வவுனியா வர்த்தக சங்கத்தினரிடம் விடுத்த கோரிக்கைக்கிணங்க ஒவ்வொரு பிரிவுக்கும் பொது சுகாதார பரிசோதகர்களுடன் மூன்று வர்த்தகர்கள் வீதம் இணைந்து பணியாற்ற இதன் போது சம்மதம் தெரிவிக்கப்பட்டது.

இச் செயற்றிடம் தொடர்பான கலந்துரையாடலில் வவுனியா பிரதி பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் எம்.மகேந்திரன், வவுனியா நகரசபை செயலாளர் இ.தயாபரன், வவுனியா வர்த்தக சங்க தலைவர் சுஜன் சண்முகராஜா, செயலாளர் ஆறுமுகம் அம்பிகைபாகன் மற்றும் பொதுசுகாதார பரிசோதகர்கள், வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இச் செயற்றிடத்தினை அமுல்படுத்தும் கலந்துரையாடலின் போது வவுனியா நகரப்பகுதியில் 24 டெங்குநோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 103 இடங்களில் நுளம்பு பெருக்கக் கூடிய இடங்களாக இணங்காணப்பட்டு அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார பணிமனையின் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ரி.தியாகலிங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.