வவுனியாவில் வீதிப் பாதுகாப்பு வார நடைபவனி!!

251

நடைபவனி

வட மாகாண ஆளுநரின் வழிநடத்தலில் ஆரம்பமான வீதிப்பா துகாப்பு வாரத்தினை முன்னிட்டு வீதி பா துகாப்பு வார நடைபவனி வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனீபா தலைமையில் இன்று (11.10.2019) காலை 8.30 மணிக்கு வவுனியா மாவட்ட செயலகத்திலிருந்து ஆரம்பமாகி ஏ9 வீதியூடாக வவுனியா நகரசபையினை சென்றடைந்தது.

வடமாகாணத்தில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் நடைபெறும் இந்த வீதி பா துகாப்பு வாரத்தின் போது வடக்கு முழுவதும் பல்வேறு மட்டங்களில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் முகமாக வீதி நாடகங்கள் பாடசாலை ரீதியான பேச்சுபோட்டிகள்,

பாடசாலைகளில் மாணவ போக்குவரத்துப் பிரிவினை ஸ்தாபித்தல், குறுந்திரைப்படம் மற்றும் துணுக்குகள் உருவாக்கம், சிறந்த வாகன ஓட்டுனர்களை தெரிவு செய்து அவர்களை கௌரவித்தல், விபத்துக்கள் குறைந்த பொலிஸ் நிலையங்களை தெரிவு செய்தல்,

அரச அலுவலர்களுக்கான இலவச உடற்தகுதி மருத்துவ பரிசோதனை மற்றும் வடமாகாணத்தில் விபத்துக்கள் அதிகமான இடங்களை இனங்கண்டு அவ்விடங்களில் போக்குவரத்து பொலிசாரின் மாதிரிகளை காட்சிப்படுத்துவது உள்ளிட்ட பல விழிப்புணர்வு செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இவ் நடைபவனியில் உதவி மாவட்ட செயலாளர் கமலேஸ்வரன், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், போக்குவரத்து பிரிவு உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நகரசபை முன்றலை சென்றடைந்த பேரணியின் பின்னர் அரசாங்க அதிபர் , மாவட்ட செயலக உத்தியோகத்தர்களினால் விழிப்புணர்வு பலூன் பறக்க விடப்பட்டது. அத்துடன் இறுதியில் அரசாங்க அதிபரின் உரையும் இடம்பெற்றிருந்தது.

கடந்த 7ஆம் திகதி ஆரம்பமான வடமாகாண வீதிபாதுகாப்பு வாரமானது எதிர்வரும் 13ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.