ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை கொ ன்றுவிட்டு பதற்றமில்லாமல் இருந்த பெண்!!

1


கேரளாவில்..


கேரளாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேரை கொ லை செய்த பெண் நீதிமன்றத்துக்கு எந்தவித பதட்டமும் இன்றி வந்த நிலையில் அவரை காண ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்ததால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.கோழிக்கோட்டில் உள்ள கூடத்தை கிராமத்தை சேர்ந்த ஜோலி (47) என்ற பெண் கடந்த 14 ஆண்டுகளில் தன் குடும்பத்தை சேர்ந்த ஆறு பேரை கொ லை செய்துள்ளார். தனது முதல் கணவர், பெற்றோர்கள், இரண்டாம் கணவரின் முதல் மனைவி, குழந்தை உள்ளிட்ட ஆறு பேரை தான் அவர் கடந்த 2002லிருந்து 2014ஆம் ஆண்டுக்குள் கொ லை செய்தார்.


ஜோலியின் வழக்கு கேரளாவை உலுக்கியுள்ள நிலையில் அவரிடம் நடத்தப்படும் விசாரணையில் புதிய திடுக்கிடும் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளது. இந்த வழக்கில் அவருக்கு உடந்தையாக இருந்ததாக கைதான இரண்டு பேரையும் 6 நாள் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் ஜோலி நேற்று கோழிக்கோடு நீதிமன்றத்துக்கு பலத்த பா துகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.


அப்போது பிங்க் நிற உடையில் தலையில் முக்காடு போட்டபடி வந்த ஜோலி தனது முகத்தை மூடவில்லை. அவர் எந்தவித பதட்டமும் இன்றி சாதாரணமாகவே காணப்பட்டார். ஜோலியின் செயல் குறித்து தான் கேரளாவில் தற்போது எல்லா இடங்களிலும் பேசப்படும் நிலையில் அவரை காண பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் நீதிமன்றம் உள்ள பகுதியில் குவிந்தனர்.

இதோடு ஜோலி வசிக்கும் பகுதியை சேர்ந்த பலரும் அங்கு வந்திருந்தனர், நம்முடன் நன்றாக பேசி பழகிய ஜோலி இவ்வளவு கொ டூரமானவரா என அதிர்ச்சி விலகாமல் அவரை பார்த்தபடி அவர்கள் இருந்தனர்.