வவுனியாவில் வடக்கு மாகாண பண்பாட்டு விழா!!

11


வடக்கு மாகாண பண்பாட்டு விழா


வடக்கு மாகாண பண்பாட்டு பெருவிழாவின் முதலாம் நாள் நிகழ்வு நடைபெற்றுள்ளது. குறித்த நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று(11.10.2019) (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.வடக்கு மாகாண பண்பாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில் பேராசிரியர் சண்முகலிங்கன் தலைமையில் ஆரம்பமான முதல் நாள் நிகழ்வில் கலைநிகழ்வுகள், சிறப்பு ஆய்வரங்கு மற்றும் இளம் கலைஞர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.


இதனைத் தொடர்ந்து இடம்பெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வில், பட்டிமன்றம், கவியரங்கம், பண்பாட்டு ஊர்வலம், சிறந்த நூற்பரிசு வழங்கல் மற்றும் விருது வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.


குறித்த நிகழ்ச்சியில், மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம் கனீபா, பிரதேச செயலாளர் கா.உதயராசா, பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் சுஜீபா சிவதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.