வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இருந்து வர்த்தகப் பிரிவில்18 மாணவிகள் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி!!(படங்கள்)

925

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இருந்து இவ்வாண்டு வெளியாகிய உயர்தரப் பெறுபேறுகளின் அடிப்படையில், வர்த்தக பிரிவில் உயர் பெறுபேறுகளைப் பெற்று 18 மாணவிகள் பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.

இது தொடர்பில் பாடசாலை அதிபர் செல்வி.உமா இராசையா தெரிவிக்கையில்..

கடந்த ஆண்டுகளைப் போன்று இம்முறையும் எமது கல்லூரியில் இருந்து வர்த்தகப் பிரிவின் ஊடாக பல்கலைக்கழகத்திற்கு 18 மாணவர்கள் தெரிவாகியுள்ளனர். கடந்த ஆண்டை விட இவ்வாண்டு எமது பாடசாலையில் இருந்து பல்கலைக் கழகத்திற்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மேலும் சு.லவீனா என்ற மாணவி மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தினைப் பெற்று எமது பாடசாலைக்கு பெருமை தேடித் தந்துள்ளார்.

எமது கல்லூரியில் இருந்து சு.லவீனா, சி.சுரேகா, ந.கீர்த்தனா, மு.இன்பஜோதி, கி.தட்சாயினி, பா.வினோதினி, தி.ஜனார்த்தி, உ.உமாசாலினி, உ.துஸ்யந்தி, க.மகிழ்தினி, சி.மறிற்பிரியங்கா, த.இந்துமதி, பா.சதுர்சா, சி.திருசிகா, இ.பிரமிகா, கே.தமிழினி, அ.சிவாஜினி, யூ.விசாலினி ஆகிய மாணவிகள் பல்கலைக் கழகத்திற்கு வர்த்தகப் பிரிவின் ஊடாக தெரிவாகியுள்ளனர் எனத் தெரிவித்தார்.

வர்த்தகப் பிரிவு ஆசிரியர்களான திரு.பா.பாலஸ்ரீந்திரன், திருமதி சி.மகேந்திரராஜா, திருமதி அ.ரஞ்சன் ஆகியோர் இவர்களுக்கு பாடசாலையில் கற்பித்தமை குறிப்பிடத்தக்கது.

vavuniyavavuniya2