இலங்கை பெண்ணின் உள்ளாடையில் இருந்த லட்சக்கணக்கில் மதிப்பிலான தங்கம் சிக்கியது எப்படி?

1


தங்கம் சிக்கியது எப்படி?


கொழும்பில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு க டத்தி வரப்பட்ட ரூ.36¾ லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இது தொடர்பாக இலங்கை பெண் உள்ளிட்ட இருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.சென்னை விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் இருந்தனர்.


அப்போது கொழும்பில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் வந்து இறங்கிய இலங்கையை சேர்ந்த சிவக்குமார் பழனியாண்டி (38) என்பவரின் உடைமைகளை சோதனை செய்தனர். அதில் அவர் தங்க நகைகளை மறைத்து வைத்து க டத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.


அதே போல் கொழும்பில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த இலங்கையை சேர்ந்த சகாய மேரி (35) என்பவரின் உடமைகளை சோதனை செய்தபோது, துணிகளுக்கு இடையில் தங்க நகைகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

அவரை தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்ததில், உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த தங்க கட்டிகளையும் சேர்த்து ரூ.17 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள 448 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

இந்த நிலையில், 2 பேரிடமும் இருந்து ரூ.36 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள 973 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.