இந்துப் பெண் ஒருவர் காட்டிய அடையாளங்கள்: புகாருக்கு பதினைந்தே நிமிடங்களில் தீர்ப்பளித்த நீதிமன்றம்!!

2


இந்துப் பெண் ஒருவர்..


இந்து பெண் ஒருவர் தங்களை நோக்கி மோ சமான விரல் அடையாளங்களை காட்டுவதாக, அவரது பக்கத்து வீட்டுக்காரர்கள் பொலிசில் புகாரளித்தனர். பொலிசார், ஷைலா ஜாக்குலின் (53) என்ற அந்த பெண்ணை நீதிமன்றத்துக்கு இழுத்தனர். பொலிசார் தங்கள் தரப்பு ஆதாரமாக நூற்றுக்கணக்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.கிழக்கு எஸ்ஸெக்சை சேர்ந்த ஷைலா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட, நீதிபதிகள் பதினைந்தே நிமிடங்களில் அந்த வழக்கை தள்ளுபடி செய்து அவரை அனுப்பிவிட்டனர். நடந்தது இதுதான், ஷைலா வீட்டுக்கும் அவரது பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும், பழைய பிரச்னை ஒன்று உள்ளது.


Stephane Duckett என்ற அந்த பக்கத்துவீட்டுக்காரர், ஷைலா வீட்டுக்கு எதிரே உள்ள ஒரு வேர்க் ஷொப்பை வாங்கி, அதை வார இறுதியில் பார்ட்டி வைக்கும் இடமாக மாற்ற, கோபமடைந்த ஷைலா தம்பதி அதிகாரிகளிடம் புகாரளித்துள்ளனர். ஆனால், எதிர்பார்த்ததற்கு மாறாக, ஷைலா அந்த வீட்டுப்பக்கம் போகக்கூடாது என தடையுத்தரவு ஒன்றை அதிகாரிகள் பிறப்பித்துள்ளனர்.

அந்த தடை உத்தரவு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் காலவதியாக, கடற்கரையை நோக்கி மீண்டும் யோகா செய்யத் தொடங்கியுள்ளார் ஷைலா.


விரல்களால் அவர் செய்யும் யோகா முத்திரைகளைக் கண்ட பக்கத்து வீட்டுக்காரர்கள், ஷைலா தங்கள் வீட்டைப்பார்த்து விரலைக் காட்டி மோசமான அடையாளங்களைக் காட்டுவதாக மீண்டும் பொலிசாரிடம் புகாரளித்துள்ளனர்.

பொலிசார் ஷைலா தம்பதியரை நீதிமன்றத்துக்கு இழுத்து, அவர்கள் Duckett அல்லது அவரது மனைவியை தொடர்பு கொள்ளவும், ஷைலா வீட்டுக்கு வெளியே யோகா செய்வதை தடுக்கவும் தடை விதிக்குமாறு கோரினர்.

ஆனால் நீதிபதிகள் ஷைலாவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர். இது குறித்து பேசிய ஷைலா, ஏற்கனவே தான் பொலிசாரிடம் இது தனது இந்திய பாரம்பரியம் மற்றும் யோகா தொடர்பான விடயம் என விளக்கியும் அவர்கள் கேட்கவில்லை.

இந்த விடயம் நீதிமன்றத்துக்கு போயிருக்கவே கூடாது என்றார். இது என் மதம் மீதான தா க்குதல் என்று கூறியுள்ள ஷைலா, பொலிசார் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.