வவுனியா பூவரசன்குளம் விமானப்படை கல்லூரியில் பயிற்சி பெறும் தமிழ் பொலிசாரை சந்தித்த ஆளுநர்!!

4


பூவரசன்குளம் விமானப்படை கல்லூரி..


வவுனியா பூவரசங்குளம் விமானப்படை பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் தமிழ் மொழி பேசும் பொலிஸ் உத்தியோகத்தர்களை வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இன்று (12.10.2019) பிற்பகல் சந்தித்தார்.ஆளுநர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கமைய முதன் முறையாக தமிழ் பிரதேசத்தில் தமிழ் மொழி பேசும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகின்றது.


இதன்போது அவர்களது பயிற்சி தொடர்பாகவும், நிறை குறைகள் தொடர்பாகவும் கலந்துரையாடி இருந்ததுடன், தமிழ் பொலிஸ் பயிற்சியாளர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தார். இந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சியில் முதற்கட்டமாக 153 பேர் இணைக்கப்பட்டு பயிற்சி பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.