இலங்கையில் சமூக வலைத்தள பாவனையாளர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!!

312

பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பொது மக்களுக்கு பொலிஸார் முக்கிய எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளனர். அதன்படி பேஸ்புக் உள்ளிட்ட ஏனைய சமூக வலைத்தளங்கள் ஊடாக பண மோசடி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் கூறுகையில், தபால் பொது சேவையாளர் என தம்மை அடையாளம் காட்டிக் கொள்ளும் குறித்த மோசடி குழுக்கள் மக்கள் மத்தியில் முதலில் நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.

அதன் பின்னர் சீட்டிழுப்பில் பரிசு கிடைத்துள்ளதாகவோ அல்லது நம்பத்தகுந்த வேறு காரணங்களை கூறி அவற்றை பெற்றுக்கொள்ள தீர்வை செலுத்த வேண்டும் என கூறுகின்றன. இதற்காக ஒரு குறிப்பிட்ட பணத்தொகையை தாம் வழங்கும் வங்கி கணக்கில் வைப்பு செய்யுமாறு கூறி பணம் வைப்பிலிடப்பட்ட பின்னர் தொடர்பை துண்டிக்கின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான மோசடியால் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் உள்நாட்டவர்கள் பலரும் கணிசமான அளவு பணத்தை இழந்துள்ளதாக மே்றகொள்ளப்பட்டுள்ள முறைப்பாடுகளின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.