60 ஆண்டுகளில் இல்லாத பலத்த மழை : ஜப்பானை புரட்டிப்போட்ட ஹகிபிஸ்!

329

ஜப்பானை புரட்டிப்போட்ட ஹகிபிஸ்..

ஜப்பானில் ஹகிபிஸ் புயல் தா க்குதலால் ப லியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று முன்தினம் ஜப்பானை ஹகிபிஸ் புயல் கடுமையாக தா க்கியது. இதனால் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பலத்த காற்றுடன் மழை பெய்ததால், மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

பலத்த மழை மற்றும் சூறைக்காற்றினால் பல வீடுகள் சேதமடைந்தன. இதன் காரணமாக பொதுமக்கள் பலர் உடைமைகளை இழந்தனர். சுமார் 3 லட்சத்து 76 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டும், 14 ஆயிரம் வீடுகளில் போதிய தண்ணீர் வசதி இல்லாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து நிவாரணப் பணிகளுக்காக ஜப்பான் அரசு ராணுவ படைகளை அனுப்பி வைத்துள்ளது. நேற்றைய தகவலின்படி இந்த புயலுக்கு 19 பேர் ப லியானதாகவும், 12 பேர் கா ணாமல் போய்விட்டதாகவும் தெரிய வந்தது.

இந்நிலையில், தற்போது ப லியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளதாகவும், 17 பேர் கா ணாமல் போனதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.