இலங்கையின் கலாசாரத்தை பேணாத மகள் மீது தந்தை தாக்குதல் : இத்தாலியில் சம்பவம்!!

644

Italyஇத்தாலியின் வடமேற்கு கரையோர பிரதேசத்தில் இலங்கையை சேர்ந்த 18 வயது யுவதி ஒருவர் அவருடைய தந்தையால் தாக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இலங்கையின் கலாசாரத்தை பின்பற்றுமாறு கோரிய போதும், தமது மகள் ஐரோப்பிய கலாசாரத்தை பின்பற்றி வருவதை அடுத்தே, குறித்த தந்தை தமது மகள் மீது தாக்குதலை நடத்தியுள்ளார்.

ஜெனோவா ரிப்பப்லிக்கா என்ற செய்திதாளின் தகவல்படி, குறித்த யுவதி பல தடவைகளாக தமது தந்தையாரால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பாதுகாப்பு கருதி தாம் வீடு திரும்பமுடியாது என்று சிகிச்சைப்பெற்று வரும் யுவதி மருத்துவமனை தரப்பினரிடம் கூறியுள்ளதாக செய்திதாள் குறிப்பிடடுள்ளது.