தமிழ் சினிமாவில் கால் பதிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!!

2


இந்திய கிரிக்கெட் வீரர்கள்


இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களான ஹர்பஜன் சிங் மற்றும் இர்பான் பதான் இரண்டு தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.கடாரம் கொண்டான் படத்திற்கு பிறகு, இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் பிரபலமான அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்க உள்ளார்.


7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


இதன் படப்பிடிப்பு வரும் அக்டோபர் 4ம் துவங்க உள்ள நிலையில், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இர்பான் பதான், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் அவர் நடிகராகவும் அறிமுகமாகிறார்.

இதேபோல ட்விட்டரின் வாயிலாக அடிக்கடி தமிழ் ரசிகர்களிடம் கலந்துரையாடி வரும் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், நடிகர் சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.