மன்னாரில் கடும் மழை : சில கிராமங்கள் நீரில் மூழ்கின!!

606

மன்னாரில் கடும் மழை

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கன மழை காரணமாக சில கிராமங்கள் மற்றும் தாழ் நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. மன்னார் மாவட்டத்தில் கடந்த சில நாட்காளாக மழை பெய்து வரும் நிலையில் இன்று பகல் 2 மணியளவில் கடும் மழை பெய்துள்ளது.

இதனால் மன்னார் தீவு பகுதியில் உள்ள குளங்கள் , கால்வாய்கள் மற்றும் நீரோடைகள் மழை நீரில் நிறைந்து காணப்படுவதுடன், மக்கள் வசிக்கும் தாழ் நிலப்பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட சாந்திபுரம் , ஜீவபுரம் , ஜிம்றோன் நகர் , எமில் நகர் , உட்பட பல்வேறு கிராமங்கள் முழுவதும் நீர் சூழ்ந்துள்ளதுடன் பாதைகள் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளன.

நானாட்டான், மாந்தை மேற்கு, முசலி மற்றும் மடு பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் வயல் நிலங்கள் மற்றும் தோட்டச் செய்கை மேற்கொள்ளப்படும் நிலங்களில் மழை நீர் நிறைந்து காணப்படுகின்றது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சில கிராமங்களை சேர்ந்த மக்கள் இடம் பெயர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.