மலையக பாடசாலையில் வெடிகு ண்டு இருப்பதாக பரப்பப்பட்ட புரளியால் ஐவர் காயம்!!

249


மலையக பாடசாலையில்..



ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவ சென்மேரிஸ் மத்திய கல்லூரியின் ஆரம்ப பிரிவில் வெடிகு ண்டு இருப்பதாக கூறப்பட்ட சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவையில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



இந்த சம்பவம் நேற்று காலை 11.30 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கல்லூரியில் கல்வி நடவடிக்கை இடம்பெற்று கொண்டிருந்த போது பொதுமக்களால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய பொலிஸாரினால் ஆரம்ப பிரிவை சேர்ந்த தரம் ஒன்று தொடக்கம் ஆறு வரையான மாணவர்கள் முதற்கட்டமாக பொலிஸாரின் பாதுகாப்போடு வெளியேற்றப்பட்டுள்ளனர்.




சம்பவம் தொடர்பில் கல்லூரியின் வளாகத்தை சோதனையிடுவதற்காக மஸ்கெலியா முகாமில் இருந்து விஷேட அதிரடி படையினர் மற்றும் மோப்பநாய் என்பன வரவழைக்கபட்டு சோதனைகள் மேற்கொள்ளபட்டுள்ளன.


சோதனை மேற்கொண்ட விஷேட அதிரடி படையினர் கல்லூரியின் வளாக பகுதியில் சந்தேகத்திற்கு இடமான எவ்வித பொதிகளும் தென்படவில்லையென தெரிவித்துள்ளனர்.

இதன்போது பாடசாலையை விட்டு மாணவர்களை வெளியேற்றும் போது நிலவிய பதற்றம் காரணமாக மூன்று மாணவர்களும், இரண்டு பெற்றோர்களும் காயங்களுக்கு உள்ளாகி நிலையில் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இதேவேளை குறித்த கல்லூரியில் வெடிகு ண்டு இருப்பதாக கூறப்பட்ட தகவலை யார் ஊடாக வழங்கபட்டது என்ற விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.