
ஆஷஸ் தொடரை முற்றிலுமாக இழந்துள்ள நிலையில், இங்கிலாந்து அணி வீரர் பனீசர் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அவுஸ்திரேலியாவுடனான ஆஷஸ் தொடரை 5-0 என்ற கணக்கில் இங்கிலாந்து இழந்து விட்டது.
கடைசிப் போட்டியில் இங்கிலாந்து மிக மோசமான முறையில் தோல்வியுற்றது. போட்டி முடிந்த பின் ஹோட்டல் அறைக்கு திரும்பிய இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் பனீசர், அமெரிக்க பெண்ணான அலிசன் என்பவரை அறைக்கு தனியாக அழைத்து பேசியதாக இங்கிலாந்தின் தி மிர்ரர் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அலிஸன் கூறுகையில் நான் அவருடன் கிரிக்கெட் குறித்துத்தான் பேச விரும்பினேன். ஆனால் அவரோ என்னைக் கவருவதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்தியது வினோதமாக இருந்தது.
நான் மெல்போர்னில் நடந்த டெஸ்ட் போட்டியின்போது வந்திருந்தேன். அப்போது எனக்கு அவர் ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தார், நானும் பதில் அனுப்பினேன்.
அப்போது விளையாட்டுக்காக யாரோ அனுப்பியதாகவே நினைத்தேன், பிறகுதான் பனீசர் என்று தெரிந்து வியந்தேன்.
என்னை அறைக்கு அழைத்ததால் நானும் அதை ஏற்றுச் சென்றேன் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பாக கடந்தாண்டு, இங்கிலாந்து நைட் கிளப்புக்குப் போயிருந்தபோது அங்கிருந்த பாதுகாவலர்கள் மீது சிறுநீர் கழித்ததாக சர்ச்சையில் சிக்கி வெளியேற்றப்பட்டார்.
இதைத் தொடர்ந்து அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே விவாகரத்து நடந்தது. தற்போது பெண்ணுடன் ஹோட்டல் ரூமில் பேசிய விவகாரத்தால் அவர் மீது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிகிறது.





