மூன்று வகை போட்டியிலும் இந்திய அணியின் தலைவராக தொடர விரும்புகிறேன் : டோனி!!

510

Dhoni

மூன்று வகை போட்டியிலும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக தொடர விரும்புவதாக டோனி தெரிவித்துள்ளார். டெல்லியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இன்னும் ஒரு ஆண்டுகள் இருக்கிறது. அப்படி இருக்கையில் உலக கோப்பையை வெல்வது குறித்து கருத்து சொல்வது சரியாக இருக்காது.

ஒரு ஆண்டு மட்டுமே இருக்கையில் புதிய வீரர் ஒருவருக்கு அணித்தலைவர் பொறுப்பை அளிப்பது சரியானதாக இருக்காது. 3 வகையான போட்டிகளிலும் அணித் தலைவராக தொடர விரும்புகிறேன்.

கிரிக்கெட் போட்டியில் நெருக்கடி எப்பொழுதும் இருக்க தான் செய்யும். அதனை அனுபவம் உள்ள வீரர்கள் எளிதில் சமாளிக்க முடியும். என்னை பொறுத்தமட்டில் தற்போது நான் நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறேன். வருங்காலங்களில் உடல்நிலை எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியாது.

தென் ஆபிரிக்க தொடர் எங்களுக்கு கடினமான நேரமாக இருந்தது. டர்பன் டெஸ்ட் போட்டியில் மோசமாக ஆடியது. இரண்டாவது டெஸ்டிலும் எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. பல வீரர்களுக்கு வெளிநாட்டு மண்ணில் விளையாடுவது முதல்முறையாகும். இருப்பினும் அணியின் ஒட்டுமொத்த செயல்பாடு நன்றாகவே இருந்தது.

பிட்ச் உதவிகரமாக இருக்கும் பட்சத்தில் நமது பந்து வீச்சாளர்களின் செயல்பாடு நன்றாக இருக்கிறது. அன்னிய மண்ணில் பந்து வீச்சில் நாம் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமானதாகும். நம்மிடம் நிறைய திறமையான பந்து வீச்சாளர்கள் உள்ளனர். டெஸ்ட் போட்டியில் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தும் திறமை நமது வீரர்களுக்கு உள்ளதென டோனி தெரிவித்துள்ளார்.