தனக்கு பதிலாக 8 போலிகளை தயார் செய்து மோ சடியில் ஈடுபட்ட பெண் எம்.பி!!

310

தன்னைபோல் உருவம் கொண்ட 8 போலிகளை ஏற்பாடு செய்து தேர்வெழுத வைத்த ஆளும் கட்சி பெண் எம்.பி பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு வங்கதேச நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமன்னா நுஸ்ரத், குறைந்தது 13 தேர்வுகளில் எட்டு ஆள்மாறாட்டம் செய்பவர்களைப் பயன்படுத்தியதாகக் கூறி பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அக்டோபர் 18, வெள்ளிக்கிழமையன்று தேர்வு எழுதும் அறைக்குள் நுழைந்த உள்ளூர் ஊடகமான நாகோரிக் தொலைக்காட்சி, நுஸ்ரத்திற்கு பதிலாக தேர்வு எழுதிய நபரை வீடியோ எடுத்து வெளியிட்டது.

இந்த விவகாரமானது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து தெரிவித்த பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னன், ‘தமன்னா நுஸ்ரத் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இனிமேல், பல்கலைக்கழகத்தின் கீழ் நடைபெறும் எந்த தேர்வுகளுக்கு அவர் அனுமதிக்கப்படமாட்டார்’ என்று அறிவித்தார்.

இதுகுறித்து பெயரிடப்படாத கல்லூரி அதிகாரி ஒருவர் கூறுகையில், நுஸ்ரத் மிகவும் செல்வாக்கு மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். தேர்வறையில் அவருடைய அடியாட்களால் போலி பாதுகாக்கப்பட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

செல்வாக்கு மிக்க குடும்பம் என்பதால் யாரும் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை எனக்கூறியுள்ளார்.