உறுதியான நோக்கம் – தொழில் செய்யும் நாடு கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு!

535

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டது.

கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் உள்ள மஹிந்த ராஜபக்ஷ மாநாட்டு மண்டபத்தில் இந் நிகழ்வு நடைபெற்று வருகிறது.

‘உறுதியான நோக்கம் – தொழில் செய்யும் நாடு’ என்ற தொனிப்பொருளில் இந்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது.

பல தொழில் வல்லுனர்கள் மற்றும் சமூக குழுக்களின் ஆலோசனைகளை பெற்று இந்த தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் முதலில் சர்வமத தலைவர்களிடம் கோட்டாபய ராஜபக்க்ஷவினால் கையளிக்கப்பட்டது. பின்னர் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்க்ஷவிடமும் கையளிக்கப்பட்டது.

கோட்டாபய ராஜபக்ஷ உரையாற்றியபோது, நாடு பிரிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதே தனது கொள்கை என்றும், அதே சட்டம் முழு நாட்டிற்கும் பொருந்தும் என்றும் கூறினார்.

இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வெளிநாட்டினரை தனது அரசாங்கம் அனுமதிக்காது என்று அவர் கூறினார்.

தனது உடனடி முன்னுரிமை பொருளாதாரத்தை மேம்படுத்துவதும் காலாவதியான நிதிச் சட்டங்களைத் திருத்துவதும் ஆகும் என்று ராஜபக்ஷ கூறினார்.

உள்ளூர் வணிகங்கள் மற்றும் சுற்றுலாத்துறைக்கு அதிக கவனம் செலுத்தப்படும் என்றார்.