200 நகரங்களை அழிவிலிருந்து மீட்ட சிறுவன் : உலகையே தன் பக்கம் ஈர்த்த ஒரே ஒரு புகைப்படத்தால் நேர்ந்த மாற்றம்!!

550

ஒரு புகைப்படத்தால் நேர்ந்த மாற்றம்

பிரேசிலில் இடுப்பு அளவு நீரில் கடற்கரையில் உடல் முழுவதும் எண்ணெய் உடன் நின்றுக்கொண்டிருந்த சிறுவனின் புகைப்படம் வைரலானதை அடுத்து 200 நகரங்கள் சுற்றுச்சுழல் பாதிப்பிலிருந்து மீட்க்கபட்டுள்ளது.

ஆகஸ்ட் 30-ம் திகதி வடகிழக்கு Paraiba மாநிலத்தின் கரையிலிருந்து எண்ணெய் கசிவு முதன்முதலில் காணப்பட்டது, இப்போது அது 2,250 கி.மீ கடற்கரையில் பரவியுள்ளது. ஏழை பிராந்தியத்தில் அழகான கடற்கரைகளை சுற்றுலாவை நம்பியுள்ள சுமார் 200 நகரங்கள் இதானல் பாதிக்கப்பட்டன.

அரசாங்கம் நெருக்கடிக்கு பதிலளிப்பதில் மெதுவாக இருப்பதாகவும், வடகிழக்கு பிரேசிலைத் தாக்கிய மிக மோசமான சுற்றுச்சூழல் பேரழிவு என்று பல வல்லுநர்கள் கூறியதைக் கையாள்வதற்கு சரியான திட்டங்களை வழங்கத் தவறிவிட்டதாகவும் சுற்றுச்சூழல் குழுக்கள் புகார் தெரிவித்தன.

இந்நிலையில், பிரேசிலில் மாசுப்பட்ட இடுப்பு அளவு கடல் நீரில், உடல் முழுவதும் எண்ணெய் உடன் சிறுவன் ஒருவன் நடந்து செல்வதை புகைப்படக்காரர் ஒருவர் படம் எடுக்க அது வைரலானது.

அக்டோபர் 21-ம் திகதி, Pernambuco மாநிலத்தில் உள்ள Cabo de Santo Agostinh-ல் உள்ள Itapuama கடற்கரையில், கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக வடகிழக்கு பிரேசில் கடற்கரையில் பரவி வரும் எண்ணெய் மாசுபாட்டை சிறுவன் சுத்தம் செய்யும் போது எடுத்த படம் அது.

அந்த படத்தில் இருந்த 13 வயதான Everton Miguel dos Anjos என்ற சிறுவன், நான்கு சகோதரர்கள் மற்றும் பல உறவினர்களுடன், அன்றைய தினம் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களுடன் கடற்கரையை சுத்தம் செய்யவும், கரையில் உள்ள பாறைகளில் இருந்து எண்ணெயைத் துடைக்கவும் முயன்றனர்.

சட்டை அழுக்காகும் என்பதால், குப்பையில் இருந்த பிளாஸ்டிக் பையை உடை போல வடிவமைத்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். உலகெங்கிலும் உள்ள முக்கிய செய்தி நிறுவனங்களால் வெளியிடப்பட்ட படங்களை பார்த்தபோது அவரது தாயார் அவரை திட்டியதாக Anjos புகைப்படக்காரரிடம் கூறியுள்ளார்.

புகைப்படம் எடுக்கப்பட்ட நான்கு நாட்களுக்குப் பிறகு, தூய்மைப்படுத்தும் நடவடிக்கையை இரா ணுவம் கையகப்படுத்தியது, மேலும் குழந்தைகளுக்கு உதவ அனுமதிக்கப்படவில்லை. இந்த கசிவின் தொடக்கத்திலிருந்து 1,000 டன்களுக்கும் அதிகமான எண்ணெய் மீட்கப்பட்டுள்ளதாக பிரேசில் க டற்படை தெரிவித்துள்ளது.