வவுனியாவில் ஒளி விழாவை முன்னிட்டு பாடசாலைகளுக்கு இடையிலான கலாச்சார போட்டி!!

667

ஒளி விழாவை முன்னிட்டு..

ஒளி விழாவை முன்னிட்டு வவுனியாவில் பாடசாலைகளுக்கு இடையில் கலாச்சார போட்டிகள் நடைபெற்றது.

வவுனியா குடியிருப்பில் அமைந்துள்ள இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை மண்டபத்தில் ஒளி விழா கலாசார போட்டி நிகழ்வுகள் இன்று (26.10) நடைபெற்றது.

ஒளி விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டி நிகழ்வில் நடனம், பேச்சு, நாடகம் மற்றும் குழு நடனம் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது.

குறித்த நிகழ்வுகள் நடுவர்களால் பார்வையிடப்பட்டு புள்ளிகள் வழங்கப்பட்டு வெற்றிபெறும் பாடசாலைகளுக்கு ஒளி விழா அன்று பரிசில்கள் வழங்கப்படவுள்ளது. வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட 25 பாடசாலைகள் குறித்த நிகழ்வில் பங்குபற்றியிருந்தன.