தடையாக இருந்த பாறை அகற்றப்பட்டது : சுர்ஜித் விரைவாக மீட்கப்படுவாரா?

335

சுர்ஜித் விரைவாக மீட்கப்படுவாரா?

திருச்சி – நடுக்காட்டுப்பட்டி பகுதியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள், 2 வயது குழந்தை சுர்ஜித் தவறி விழுந்த நிலையில், தற்போது வரையிலும் மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன.

கடந்த 25ம் திகதி மாலை 5.30 மணியளவில் 2 வயது குழந்தை சுர்ஜித், ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்திருந்த நிலையில், சிறுவனை மீட்கும் நோக்கில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

எனினும், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், ஆழ்துளை கிணற்றின் அருகில் மற்றுமொரு கிணறு தோண்டி, பக்கவாட்டில் சுரங்கம் அமைத்து குழந்தையை மீட்க முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, ரிக் இயந்திரம் கொண்டு மற்றுமொரு கிணறு தோண்டிய போதிலும், அந்த பகுதி கடினமாக பாறைப்பகுதியாக இருப்பதால், குழி தோண்டுவது சவாலாக இருந்தது.

இதனால், 76 மணி நேரம் கடந்துள்ள நிலையில், சிறுவனின் நிலை குறித்து அந்த பகுதி மக்கள் மத்தியில் ஒரு வித அச்சம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், தற்போது, மீட்பு பணிக்காக தோண்டப்படும் குழிக்குள் இடையூராக இருந்த பெரிய பாறை அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இன்னும் சில மணி நேரங்களில் சிறுவன் சுர்ஜித் மீட்கப்படலாம் என இந்திய ஊடங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.