பெண்ணை விழுங்கிய ராட்சத அலை!!(வீடியோ)

664

Alaiபிரான்ஸ் கடற்பகுதி ஒன்றில் பாறைகளுக்கு அருகே நடந்து சென்ற பெண் ஒருவரை ராட்சத அலை கடலுக்குள் அடித்து சென்ற சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சின் பியாளிட்ஸின் கலங்கரை விளக்கம் பகுதியில் பாறைகளுக்கு அருகே வேகமாக வந்த ராட்சத அலை ஒன்று 30 வயது மதிக்கதக்க பெண்ணொருவரை கடலுக்குள் இழுத்து சென்றது.

கடலோரம் எச்சரிக்கை என ஆபாய பலகைகள் போடப்பட்டிருந்தும் அதை கவனிக்காமல் பாறைகளில் இப்பெண் நடந்து சென்றதால் இத்துயர சம்பவம் நேர்ந்தது என பத்திரிக்கை ஒன்றில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து BFM-TV என்ற தொலைக்காட்சியில் நிக்கோலஸ் என்ற நபர் கூறுகையில், நாங்கள் அப்பெண்ணையும் அவரின் நண்பரையும் நோக்கி இது மிகவும் அபாயமான பகுதி திரும்பி சென்று விடுங்கள் என கூக்குரலிட்டோம். ஆனால் அலையின் சத்ததால் நாங்கள் கூறியதை அவர்களால் கேட்க இயலவில்லை.

இதற்கிடையே தீடிரென ராட்சத அலை அப்பெண்ணின் மீது மோதி அவரை அடித்து சென்றுவிட்டது என தெரிவித்துள்ளார்.

மேலும் சம்பவ இடத்திற்கு விரைவாக ஹெலிகாப்டர் விமானம் வரவழைக்கப்பட்டது. ஜனவரி 5ம் திகதி முதல் இப்பெண்ணின் சடலத்தை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

எனினும் அதனை கண்டுபிடிக்க இயலாததால் கடந்த ஜனவரி 6ம் திகதி மீண்டும் தேடுதல் பணி தொடங்கியுள்ளது. இச்சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று TF1 என்ற பிரெஞ்சு தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்டது.