ஷகீப் அல் ஹசனுக்கு 2 ஆண்டுகள் தடை விதித்து ஐசிசி அதிரடி!!

4


வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு இரண்டு ஆண்டுகள் த டை விதித்து ஐசிசி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


ஐசிசி தரவரிசை பட்டியலில் சிறந்த சகலதுறை ஆட்டக்காரர் பட்டியிலில் மூன்றாவது இடத்தில் உள்ள, வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் ஷகீப் அல் ஹசனை கடந்த 2 வருடங்களுக்கு முன் சூ தாட்ட தரகர்கள் அணுகி பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.

ஆனால் இதுபற்றி ஷகீப் அல் ஹசன் ஐசிசியின் ஊழல் தடுப்பு நிறுவனத்திடம் முறையிடவில்லை. இதற்கு விளக்கம் கேட்டு ஐசிசி சமீபத்தில் நோட்டிஸ் அனுப்பியிருந்தது.இந்த நிலையில் சூ தாட்ட த ரகர்கள் அணுகியது குறித்து ஷகீப் அல் ஹசன் ஐசிசியிடம் ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து அவர் கிரிக்கெட் விளையாட இரண்டு ஆண்டுகள் தடைவிதித்து ஐசிசி அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.