வவுனியா நகர் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் : சில வீதிகளும் பூட்டு!!

534

வவுனியா நகர்

வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள யங் ஸ்டார் விளையாட்டு மைதானத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று (30.10.2019) காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.

இக்கூட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பங்குபற்றிய நிலையில் வவுனியா நகர் முழுவதும் சுமார் 800 க்கு மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர், பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதுடன் கதிரேசு வீதி, வைரவர் கோவில் வீதி, வைரவப்புளியங்குளம் பகுதி போன்றவற்றிக்கான வீதி போக்குவரத்து பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் தடை செய்யப்பட்டிருந்தது.