புகையிரதத்தில் மோதி..

தலைமன்னாரில் இருந்து மதவாச்சியூடாக கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி 4 மாடுகள் உ யிரிழந்துள்ளன.

குறித்த சம்பவம் மன்னார் – மதவாச்சி பிரதான வீதியின் இசைமாளத்தாழ்வு பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

விபத்தை தொடர்ந்து புகையிரதம் நிறுத்தப்பட்டு பின் மீண்டும் பயணிகளுடன் மதவாச்சி நோக்கி பயணம் மேற்கொள்ளப்பட்டது.

தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி செல்லும் புகையிரதத்தில் மோதி மாடுகள் உ யிரிழக்கும் சம்பவம் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




