இலங்கையில் நாள் தோறும் ஐந்து பெண் குழந்தைகள் துஸ்பிரயோகம் செய்யப்படுகின்றனர்!!

852

Abuseஇலங்கையில் நாள் தோறும் ஐந்து பெண் குழந்தைகள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக சிறிஜயவர்தனபுர பல்கலைக்கழகப் பேராசிரியர் யாசாஞ்சலி தேவிகா ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

அனைத்துமே சிறுவர் சிறுமியருக்கு என சொல்லப்பட்ட போதிலும், சிறுவர்கள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு வருகின்றனர். நாட்டில் 84 வீதமான பாலியல் வன்கொடுமைகளினால் 18 வயதுக்கும் குறைந்த பெண் பிள்ளைகள் பாதிக்கப்படுகின்றனர்.

இணையம், செல்லிடப்பேசி போன்ற காரணிகளினால் பெண்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுகின்றனர். ஆபாச இணைய தள பயன்பாட்டில் இலங்கை உலக அளவில் முன்னணி வகிக்கின்றது.

பெற்றோர் பிள்ளைகள் குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பிள்ளைகளை அதிகளவில் புத்தகம் வாசிக்க தூண்ட வேண்டுமென பேராசிரியர் தேவிகா கோரியுள்ளார்.

கொழும்பு றோயல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.