மாணவியை து ஸ்பிரயோகம் செய்த சந்தேகநபருக்கு மீண்டும் விளக்கமறியல்!!

66


மீண்டும் விளக்கமறியல்


வீதியால் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவியை பா லியல் து ஸ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட நபருக்கு பிணை விண்ணப்பம் மறுக்கப்பட்டு எதிர்வரும் நவம்பர் 13ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று கல்முனை நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.


அம்பாறை – கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்த மாதம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சந்தேக நபர் இரு நாட்கள் அட்டாளைச்சேனை பகுதியில் த லைமறைவாகி இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தியதை அடுத்து குறித்த வழக்கு தொடர்பில் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் விசாரணை அறிக்கைகள் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இதன்போது சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் சிறுமி குறித்த மேற்பார்வை அறிக்கையை மன்றில் சமர்ப்பித்திருந்தார்.

இம்முறை சந்தேகநபர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி வயதினை சுட்டிக்காட்டி பிணை விண்ணப்பம் தொடுத்த போதிலும் நீதிவான் பாதிக்கப்பட்ட மாணவியின் வயதினை சுட்டிக்காட்டி பிணை விண்ணப்பத்தை மறுத்து வருவதுடன்,

எதிர்வரும் தவணையில் பாதிக்கப்பட்டவர் தொடர்பில் மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்த வைத்திய அதிகாரியின் வாக்குமூலத்தை மன்றிற்கு வழங்குமாறு கல்முனை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சம்பவ தினமன்று கல்முனைகுடி சாஹிப் வீதி பகுதியை சேர்ந்த குறித்த மாணவி பாடசாலை முடிந்து வீடு திரும்பிய வேளை சந்தேகநபர் சிறுமியை அழைத்து தனக்கு ஒரு சவர்க்காரம் ஒன்றினை வாங்கி தருமாறு கோரியதுடன், இதனையடுத்து குறித்த மாணவியும் சவர்க்காரம் ஒன்றினை வாங்கி சந்தேக நபரது வீட்டிற்கு சென்று வழங்கியுள்ளார்.

இந்நிலையில் சந்தேகநபர் அம்மாணவியை பா லியல் து ன்புறுத்தல் செய்த வேளை அயலவர்கள் அதை கண்ணுற்று அவ்வீட்டிற்கு சென்றுள்ளனர். இதன்போது அம்மாணவியை கைவிட்டு சந்தேக நபர் தப்பி சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.