பேஸ்புக்கில் பதிவிட்டால்..

தபால்மூல வாக்களிப்பின் பின் அது குறித்த விபரங்களையோ அல்லது படங்களையோ பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்பவர்களுக்கு சி றைத் த ண்டனை வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு எ ச்சரித்துள்ளது.

நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நாடு முழுவதிலும் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், இன்றும் நாளையும் நாடு முழுவதும் தபால்மூல வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றது.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பில், வாக்களித்த பின் அது குறித்த விபரங்களையோ அல்லது புகைப்படங்களையோ பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோருக்கு 3 ஆண்டுகள் சி றைத் த ண்டனை வழங்கப்படவுள்ளது.

எனவே குறித்த விபரங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.




