கணவனை கொலை செய்த பெண் 12 வருடங்களின் பின் கைது!!

756

Arrestதனது கணவனை கொலை செய்த வலஸ்முல்ல பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 12 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2002ஆம் ஆண்டில் இடம்பெற்ற இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் வலஸ்முல்ல பொலிஸார் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவினர் இணைந்து மேற்கொண்ட விசாரணைகளின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் முன்னதாக கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் மேலும் பலருடன் இணைந்து கணவனை கொலை செய்துள்ளதோடு சடலத்தை புதைத்துள்ளதாக கைது செய்யப்பட்ட அந்நபர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக வலஸ்முல்ல பொலிஸார் குறிப்பிட்டனர்.