நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்கும் வரையில் இன்றைய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசாங்கம் பதவியில் இருக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அண்மையில் ஆளும் கட்சிக்கு தாவி தென் மாகாண சபையின் உறுப்பினர் கிறிஷ்சாந்த புஷ்பகுமார தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்..
சில வருடங்களுக்கு முன்னரே ஜனாதிபதி என்னை ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளுமாறு கோரியிருந்தார்.
ஒரு கட்சியின் மூலம் மக்களின் வாக்குகளை பெற்று விட்டு வேறு ஒரு கட்சிக்கு செல்ல எனக்கு விருப்பமில்லை. இதன் காரணமாகவே தேர்தல் நெருங்கும் நேரத்தில் நான் ஆளும் கட்சியில் இணைந்து கொண்டேன்.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவும் பிரச்சினை காரணமாக அந்த கட்சி மயானத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றது. இன்னும் சிறிது காலத்தில் அந்த கட்சியின் பிணக்குழியில் மண்ணை போடுவதற்கும் யாரும் இருக்கப் போவதில்லை. அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் நாட்டில் ஆட்சிக்கு வரும் வாய்ப்பே இல்லை.
நாமல் ராஜபக்ச, ஜனாதிபதியாக நியமிக்கப்படும் வரை இந்த ஆட்சிக்கு நீடிக்கும் என்றார்.