விஷ பாம்பு தீண்டிய பயத்தில் விரலை வெட்டி வீசிய விவசாயி!!

555

விரலை வெ ட்டி வீ சிய விவசாயி

ஒரு சீன விவசாயி விஷ பாம்பு தீண்டியதும், ப தற்றத்தில் உடனடியாக தன்னுடைய வி ரலை வெ ட்டி வீ சியுள்ளார். சீனாவில் ஷாங்க்யூ மாவட்டத்தின் ஜெஜியாங் மாகாணத்தை சேர்ந்த ஜாங் என்கிற 60 வயதான விவசாயி, மலைப்பகுதியில் வி றகு வெ ட்டிக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது உள்ளிருந்த ஒரு விஷ பாம்பு அவருடைய வலது கை ஆள்காட்டி வி ரலில் க டித்துள்ளது. இதனால் ப தறிப்போன அவர், உடனடியாக அந்த வி ரலை வெ ட்டி வீ சிவிட்டு 50 மைல்கள் தூரத்தில் உள்ள ஹாங்க்சோ மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.

அங்கு சென்ற பின்னர் தான், விரலை மலைப்பகுதியிலேயே வீசிவிட்டு வந்தது நினைவுக்கு வந்துள்ளது. இதனால் சிகிச்சை முடிந்த பின்னர் அவருடைய விரலை மருத்துவர்களால் இணைக்க முடியாமல் போனது.

அதேசமயம் அவரது விரைவான சிந்தனையைப் புகழ்வதற்குப் பதிலாக, இதுபோன்ற வியத்தகு எதிர்வினை தேவையற்றது என்றும், அந்த பாம்பு நினைப்பதை விட குறைவான விஷம் கொண்டது என மருத்துவர்கள் ஜாங்கை திட்டியுள்ளனர்.