ஒரு மாதத்துக்கு பின் அரசியல் கட்சியில் சேர முடிவு எடுப்பேன் : நடிகை நமீதா!!

329

Namitha

ஒரு மாதத்துக்கு பின் அரசியல் கட்சியில் சேர்வது குறித்து முடிவு எடுக்கப் போவதாக நமீதா அறிவித்துள்ளார். ஏற்கனவே தான் அளித்த பேட்டி திரித்து வெளியிடப்பட்டதாக கூறிய அவர் அரசியலில் ஈடுபடுவது எப்போது என்பத குறித்தும் ஆம் ஆத்மி கட்சி பற்றிய கருத்தையும் விளக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது..

எனக்கு அரசியலில் ஆர்வம் உள்ளது. எந்த கட்சியில் இணையப் போகிறேன் என்பது பற்றி இப்போது சொல்ல முடியாது. இந்த மாதம் வரை பொறுத்து இருங்கள். அதன் பிறகு என் முடிவை சொல்கிறேன். திருச்சியில் நிருபர்கள் என்னை சந்தித்த போதும் இதையே தெரிவித்தேன்.

ஆம் ஆத்மி என்றால் சாதாரண மனிதர்கள் என்று அர்த்தம். சாதாரண மக்களும் அரசியலுக்கு வரலாம் என்பதை ஆம் ஆத்மி கட்சியினர் நிரூபித்து உள்ளனர். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். நான் அந்த கட்சியில் சேரப் போகிறேன் என்றோ தமிழகத்தில் அந்த கட்சிக்கு தலைமை தாங்கப் போகிறேன் என்றோ பத்திரிகையாளர்களிடம் சொல்லவில்லை.

நரேந்திரமோடி குஜராத் மாநிலத்தை சிறப்பாக ஆக்கியுள்ளார் அவர் திறமையாக ஆட்சி செய்வார். சரத்குமார் கட்சி பற்றி நான் சொல்லாதது பத்திரிகைகளில் வந்துள்ளது. எனக்கு தமிழக அரசியலில் புலமை கிடையாது. நான் திரையுலகில் இருக்கிறேன்.

சரத்குமார் நடிகர் சங்க தலைவராக இருக்கிறார். அவர் நடிகர் சங்கத்தை ஒற்றுமையுடன் குடும்பம்போல கொண்டு செல்கிறார். நான் அவர் குடும்ப நண்பராக இருக்கிறேன். சரத்குமார் கட்சி நடத்துவது கூட தெரியாமலா இருக்கிறேன் என்று நமீதா கூறியுள்ளார்.