யாழ். மாவட்டத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சாவகச்சேரி, மல்லாகம், ஊர்காவற்றுறை ஆகிய மூன்று நீதிமன்ற கட்டிடத் தொகுதிககளும் நாளை வியாழக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளன.
நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமின் அழைப்பின் பேரில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச ,பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் ஆகியோரினால் இந்த நீதிமன்ற கட்டிடத் தொகுதிகள் திறந்து வைக்கப்படவுள்ளன.
இதன்படி158 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட சாவகச்சேரி புதிய நீதிமன்றக் கட்டடத் தொகுதி நாளை காலை 9 மணிக்கும்,175 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மல்லாகம் நீதிமன்ற கட்டிடத் தொகுதி நாளை முற்பகல் 11.30 மணிக்கும், 127 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஊர்காவற்றுறை நீதிமன்றத் தொகுதி நாளை பிற்பகல் 2.30 மணிக்கும் திறந்துவைக்கப்படவுள்ளன .