போலி டிக்கட் வழங்கி ஏமாற்றப்பட்ட சபரிமலை யாத்திரிகர்கள் : விமான நிலையத்திலிருந்து திரும்பி வந்தனர்!!

550

Sabarimalaiதமக்கு வழங்கப்பட்டது போலி விமான பயணச் சீட்டு எனத் தெரியாது சபரிமலை யாத்திரைக்காக கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற 55 யாத்திரீகர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

விமான நிலையத்தில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் போது குறித்த யாத்திரீகர்களிடம் வழங்கப்பட்டது போலி பயணச் சீட்டு என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து விமான நிலையத்தில் இருந்து அவர்கள் அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்ட சபரிமலை யாத்திரிகர்கள் 55 பேரும் விமான பயணச் சீட்டு வழங்கிய முகவருக்கு எதிராக கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

போலி விமான பயணச் சீட்டுக்களை வழங்கி சபரிமலை யாத்திரீகர்களை ஏமாற்றிய நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.