நாடு முழுவதும் பரவும் நோய் : வைத்தியர்கள் எச்சரிக்கை!!

515

வைத்தியர்கள் எச்சரிக்கை

நாடு முழுவதும் கண் நோய் தொற்று வேகமாக பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நோய் மேலும் பரவுவதனை தடுப்பதற்காக மக்கள் சுகாதார பிரிவின் ஆலோசனையை கடைப்பிடிக்குமாறு தேசிய கண் வைத்தியசாலை இயக்குனர் மோனிக்காக விஜேரத்ன தெரிவித்துள்ளனர்.

கண்களில் கண்ணீர் வடிதல், கண் சிவத்தல் மற்றும் கண்களில் வலி ஆகிய அறிகுறிகளே இந்த நோய் தொற்றிற்கான காரணமாகும். இவ்வாறான அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக வைத்திய சிகிச்சை பெற வேண்டும் என பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு இடையில் பரவிய வைரஸ் நோய் தொற்று காரணமாக அந்த பல்கலைக்கழத்தின் 4 பீடங்கள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.