உலகின் நீண்ட கால்களை கொண்ட பெண்ணாக அனஸ்டாசியா!!

629

Long Leg

உலகின் நீண்ட கால்களை கொண்ட பெண்களுக்கான போட்டி ரஷ்யாவில் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 52 பெண்கள் கலந்துகொண்டனர்.

இதில் 42 அங்குலம் நீளமுள்ள கால்களை கொண்ட பயிற்சி வழக்கறிஞரான சைபீரியாவை சேர்ந்த அனஸ்டாசியா ஸ்ட்ராஷேவ்ஸ்கயா நீண்ட கால்களை கொண்ட பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

18 வயதே நிரம்பிய அவர் இப்போட்டியில் பங்கு கொண்டு 1600 பவுண்டுகளை பரிசாக பெற்றார். தனக்கு பரிசாக கிடைத்த தொகையில் ஒரு பகுதியை சமூக சேவையில் ஈடுபடும் அறக்கட்டளைக்கு வழங்கப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிறு வயதிலிருந்தே தான் வழக்கறிஞராக வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்ததாக குறிப்பிட்ட அவர் எதிர்காலத்தில் சிவில் சட்டம் படிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.